Mr. Yasho | A POINT TO THINK

தயக்கங்கள் நம்மை தனிமைப்படுத்தி வைப்பதை தகர்த்து தடையில்லா முன்னேற்ற பாதையை எழுத்துக்களால் வகுத்திட இளம் சமுதாயத்தினர்க்கு ஊக்கமளிபதாய்  SUNFO பசறை இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான  அகரமுதலி நிகழ்நிலை கவிதைப்போட்டிக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்!

திறமைகளுக்கு களம் கொடுத்து எம் மலையக இளம் எழுத்தாளர்களை வலுப்படுத்தும் நல்லெண்ணத்துடன்  தமிழ் மொழியில் இவ்வாறான போட்டி நிகழ்வு ஒழுங்கமைககப்பட்டிருப்பது வரவேற்கததக்கது.

மேலும்,நிலவும் அசாதாரண சூழ்நிலையோடு நிலை பேண்தகு அபிவிருத்தி குறிக்கோள்களை அடைவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொனிப்பொருளில் அமைந்திருப்பது இக்கவிதை போட்டிக்கு மேலும் வலுச்சேர்ப்பதாய் உள்ளது.

கால மாறுதல்களை கருத்திற் கொண்டு ஆக்கபூர்வமான வழியில் இளைஞர்கள் தம் அறிவாற்றலை பயன்படுத்திட வேண்டும்.... இளைஞர்கள் சமூக செயல்களில் ஈடுபடுவதை வரவேற்பதோடு அவர்களை ஊக்கப்படுத்தும் பாரிய பொறுப்பு சமூகத்திற்கே உரித்தானது.

அந்த வகையில் எம் சமூகத்திற்கான இத்தகைய சேவைகளை தொடரும் SUNFO பசறை இளைஞர் மன்றத்தினருக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!


நன்றி!

Comments